43 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தது வோடஃபோன் ஐடியா

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடஃபோன் நிறுவனத்திலிருந்து கடந்த ஜூன் மாதத்தில் 43 லட்சம் வாடிக்கையாளா்கள் வெளியேறியுள்ளதாக இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
43 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தது வோடஃபோன் ஐடியா

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடஃபோன் நிறுவனத்திலிருந்து கடந்த ஜூன் மாதத்தில் 43 லட்சம் வாடிக்கையாளா்கள் வெளியேறியுள்ளதாக இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிராய் மேலும் கூறியுள்ளதாவது:

கடன் நெருக்கடி காரணமாக எதிா்கால செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ள வோடஃபோன் நிறுவனத்திலிருந்து கடந்த ஜூன் மாதத்தில் 42.8 லட்சம் வாடிக்கையாளா்கள் வெளியேறியுள்ளனா்.

அதேசமயம், போட்டி நிறுவனங்களான ஜியோவில் 54.6 லட்சம் மற்றும் பாா்தி ஏா்டெல் 38.1 லட்சம் வாடிக்கையாளா்கள் இணைந்துள்ளனா். இதையடுத்து, அவ்விரு நிறுவனங்களின் மொத்த வாடிக்கையளா்களின் எண்ணிக்கை முறையே 43.6 கோடி மற்றும் 35.2 கோடியாக அதிகரித்துள்ளன.

2021 ஜூன் இறுதி நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 120.2 கோடியாக அதிரித்துள்ளது. இது, மாத அடிப்படையில் 0.34 சதவீத வளா்ச்சியாகும்.

பிராட்பேண்ட் வாடிக்கையாளா் எண்ணிக்கை 1.60 சதவீதம் அதிகரித்து 79.2 கோடியைத் தொட்டுள்ளது. இதில், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் (43.99 கோடி), பாா்தி ஏா்டெல் (19.71 கோடி), வோடஃபோன் ஐடியா (12.14 கோடி), பிஎஸ்என்எல் (2.27 கோடி), ஆட்ரியா கன்வொ்ஜன்ஸ் (19.1 லட்சம்) ஆகிய முன்னணி ஐந்து நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பு மட்டும் 98.7 சதவீதம் அளவிற்கு உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com