சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு

சாம்சங் நிறுவனம் அடுத்தடுத்த தன்னுடைய புதிய ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தி வருகிற நிலையில் அதன் புதிய படைப்பான கேலக்ஸி எம் 32 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்
சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு
சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு

சாம்சங் நிறுவனம் அடுத்தடுத்த தன்னுடைய புதிய ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தி வருகிற நிலையில் அதன் புதிய படைப்பான கேலக்ஸி எம் 32 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

கேலக்ஸி எம் 42 விற்கு பின் கேலக்ஸி எம் சீரியஸில் வருகிற இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுவாகும்.

இரண்டு வகையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனின்  விலைகளை ரூ.20,000 மற்றும் ரூ.25,000 என நிர்ணயம் செய்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.

கேலக்ஸி எம் 32 5ஜி -யின் சிறப்பம்சங்கள் :

* மீடியா டெக் டைமென்சிட்டி 720 செயலியில் இயக்கப்படுகிறது.

* அதிவேக இணையத் தொடர்பு கொண்ட 12 5ஜி பிராசஸர் 

*6.5 இன்ச் அளவு கொண்ட எச்டி தொடுதிரை 

* இரண்டாண்டுகள் இலவசமான ஓஎஸ் புதுப்பித்தல் 

*பின்பக்கம் 48 எம்பி கேமரா , முன்பக்கம் 13 எம்பி கேமரா வசதி 

* 5000 ஆம்ப் பாட்டரி 

மேலும் சாம்சங்கின் பாதுகாப்பு வசதிகள் இதிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள சாம்சங் கடைகளிலும் , அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டிலும் பெற்றுக்கொள்ளலாம் என சாம்சங் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com