சாம்சங் 'ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்' - 8 லட்சம் பேர் முன்பதிவு

தென் கொரியாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய படைப்பான மடிக்கும் வகை ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு வருவதற்கு முன்பே  8 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதில் கேலக்ஸி இஸட் போல்ட் 3 மற்றும் கேலக்ஸி இஸட் பிலிப் 3 ஆகிய இரண்டு வகை ஸ்மார்ட்போன்களை 6 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும் மீதமிருக்கும் 2 லட்சம் பேர் கேலக்ஸி இஸட் ஸ்மார்ட்போனையும் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த முன்பதிவின் எண்ணிக்கை முந்தைய சாதனமான கேலக்ஸி இஸட் போல்ட் 2-ன் முன்பதிவை விட பத்து மடங்கு அதிகம் .

மேலும் முன்பதிவிற்கென இஸட் தொடரின் விலைகளை 340 டாலராக குறைத்ததால் மடிக்கும் வகை ஸ்மார்ட்போன்கள் அதிக கவனங்களை பெற்றிருக்கிறது. 

இதில்  'எஸ் பென்' அமைப்பைக் கொண்ட இஸட் போல்ட் 3 ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் 1.20 லட்சம் ரூபாய்க்கும் , இஸட் பிலிப் 3 இந்திய மதிப்பில் ரூ.79,456 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

எஸ்கே டெலிகாம் நிறுவனத்தின் தகவலின் படி , புதிய கேலக்ஸி இஸட் பிலிப் மற்றும் போல்ட்  ஸ்மார்ட்போன்களை  முன்பதிவு செய்தவர்களில் 60 சதவீதம் பேர் 30 - 40 வயதிற்குள் இருப்பவர்கள் எனவும் 25-45 வயதிலிருக்கும் பெண்கள் அதிகமும் இஸட் பிலிப் 3 சாதனத்தை முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்றும்  தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com