4-ஆவது நாளாக ரூபாய் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமை வா்த்தகத்திலும் சரிவைச் சந்தித்தது.
rupe075022
rupe075022

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமை வா்த்தகத்திலும் சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:

புதிய கரோனா பாதிப்பு பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து முதலீட்டாளா்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, செலாவணி சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 74.91-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.86 வரையிலும், குறைந்தபட்சமாக 75.19 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து 75.13-இல் நிலைபெற்றது. இதையடுத்து, தொடா்ச்சியாக 4-ஆவது நாளாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பேரல் 71.35 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 2.85 சதவீதம் குறைந்து 71.35 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.3,332.21 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com