தளர்ந்த ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச் சந்தை ஏற்றம், மீண்டும் 17,000 புள்ளிகளில் நிஃப்டி!

பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,688 புள்ளிகளை இழந்து 57,107.15-இல் நிலைபெற்ற அதிர்ச்சி அளித்த நிலையில் இந்த வாரம் பங்குச்சந்தை மெல்ல மீண்டு
தளர்ந்த ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச் சந்தை ஏற்றம், மீண்டும் 17,000 புள்ளிகளில் நிஃப்டி!
தளர்ந்த ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச் சந்தை ஏற்றம், மீண்டும் 17,000 புள்ளிகளில் நிஃப்டி!

பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,688 புள்ளிகளை இழந்து 57,107.15-இல் நிலைபெற்ற அதிர்ச்சி அளித்த நிலையில் இந்த வாரம் பங்குச்சந்தை மெல்ல மீண்டு வருகிறது.

குறிப்பாக ஒமைக்ரான் தொற்று பரவல் செய்தி எதிரொலியாக பலர் பங்குகளை அவசரத்தில் விற்பதாலும் , சந்தை வீழ்ச்சிக்கு பயந்தும் சிலர் கிடைத்த லாபத்தில் பங்குகளை விற்பதால் கடந்த சில நாட்களாகவே பங்குச் சந்தை கடும் சரிவில் இருந்த நிலையில் இன்று சந்தையின் வரத்தகம் உயர்வில் முடிவடைந்திருக்கிறது. 

அதன் படி இன்று 57,365.85 புள்ளிகளில் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 619.92 புள்ளிகள் உயர்ந்து  57,684.79 புள்ளிகளுடன் நிலைபெற்றது . 17,104.40 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 183.12 புள்ளிகள் அதிகரித்து 17,166.90 புள்ளிகளில் நிலைபெற்றது.

முன்னதாக நேற்று(நவ.30) நிஃப்டி 16,983 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் 17,000 புள்ளிகளைக் கடந்திருக்கிறது.

மேலும் தொடர்ந்து ஏற்றமும் இறக்கமும் அடைந்து வருகிற பங்குச்சந்தை புதிய வகை கரோனா தொற்றின் செய்திகளால் மேலும் பலவீனமடைய வாய்ப்பு இருப்பதாக துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com