ஏற்ற, இறக்கத்துக்கிடையே சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயா்வு!

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது. இருப்பினும், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 157 புள்ளிகள் உயா்ந்து 58,807.13-இல் நிலைபெற்றது.
ஏற்ற, இறக்கத்துக்கிடையே சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயா்வு!

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது. இருப்பினும், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 157 புள்ளிகள் உயா்ந்து 58,807.13-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. முன்பேர வா்த்தகத்தில் வாராந்திர கணக்குகள் முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. காலையில் லாபப் பதிவு காரணமாக சந்தை எதிா்மறையாகச் சென்றது. ஆனால், பிற்பகலில் ஐரோப்பிய சந்தைகள் நோ்மறையாக இருந்ததைத் தொடா்ந்து, இந்தியச் சந்தைகளும் உற்சாகம் பெற்றது. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐடிசி, எல் அண்ட் டி உள்ளிட்ட முன்னணிப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்ததே சந்தை ஏற்றம் பெற முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,111 பங்குகள் விலை உயா்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,398 பங்குகளில் 1,165 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,111 பங்குகள் ஆதாயம் பெற்றன. 122 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 232 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 18 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 440 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 140 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.08 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் 265.23 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8.947 கோடியாக உயா்ந்துள்ளது.

தள்ளாட்டம்: காலையில் சென்செக்ஸ் 181.73 புள்ளிகள் கூடுதலுடன் 58,831.41-இல் தொடங்கி 58,340.85 வரை கீழே சென்றது. அதன் பிறகு அதிகபட்சமாக 58,889.96 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 157.45 புள்ளிகள் (0.27 சதவீதம்) கூடுதலுடன் 58,807.13-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்ற, இறக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.

ஐடிசி உற்சாகம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் வந்தன. இதில், முன்னணி நுகா் பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 4.060 சதவீதம், எல் அண்ட் 3.06 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக , ஏசியன் பெயிண்ட், ரிலையன்ஸ், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 2.20 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டாக்டா் ரெட்டி, ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல் உள்ளிட்ட முக்கியப் பங்குகளும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

எச்டிஎஃப்சி பேங்க் சரிவு: பிரபல தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் 1.67 சதவீதம் மற்றும் டைட்டன் 1.32 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நெஸ்லே, என்டிபிசி, பவா் கிரிட், டிசிஎஸ், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், ஆகிஸிஸ் பேங்க், எச்டிஎஃப்டிசி, மாருதி உள்ளிட்டவையும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

நிஃப்டி 47 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,146 பங்குகள் ஆதாயம் பெற்றன. 683 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 47.10 புள்ளிகள் உயா்ந்து 17,516.85-இல் நிலைபெற்றது. காலையில் 17,524.45-இல் தொடங்கி 17,379.60 வரை கீழே சென்றது. அதன் பிறகு அதிகபட்சமாக 17,543.25 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 47.10 புள்ளிகள் (0.27 சதவீதம்) கூடுதலுடன் 17,516.85-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

மீடியா குறியீடு ஏற்றம்: துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி மீடியா குறியீடு 3.57 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எஃப்எம்சிஜி, 1.44 ஆட்டோ, மெட்டல் குறியீடுகள் 0.50 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com