வால்மார்ட், ஃபிளிப்கார்ட் இணைந்து இந்திய நிறுவனத்தில் ரூ.1100 கோடி முதலீடு

அமெரிக்காவின் வால்மார்ட் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து இந்திய நிறுவனமான நிஞ்சாகார்ட்டில் ரூ.14.5 கோடியை முதலீடு செய்ய இருக்கிறார்கள்.
வால்மார்ட், ஃபிளிப்கார்ட் இணைந்து இந்திய நிறுவனத்தில் ரூ.1100 கோடி முதலீடு
வால்மார்ட், ஃபிளிப்கார்ட் இணைந்து இந்திய நிறுவனத்தில் ரூ.1100 கோடி முதலீடு

அமெரிக்காவின் வால்மார்ட் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து இந்திய நிறுவனமான நிஞ்சாகார்ட்டில் ரூ.1100 கோடியை(145 மில்லியன் டாலர்) முதலீடு செய்ய இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக்கத்தில் பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிற ஃபிளிப்கார்ட் வேறு சில புதிய நிறுவனங்களிலும் முதலீடு செய்திருக்கிறது.

அந்த வகையில் தற்போது விவசாயப் பொருள்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிற நிறுவனமான நிஞ்சாகார்ட்டில் வால்மார்ட்டுடன் இணைந்து ஃபிளிப்கார்ட் நிறுவனம் ரூ.1100 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது.

இந்தியாவில்  விவசாயிகளிடம் இருந்து மூலப் பொருள்களை வாங்கிக் கொண்டு வணிகப்படுத்தும் நிறுவனங்களில் முதன்மையான பங்களிப்பை அளித்து வரும் நிஞ்சாகார்ட் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம்.

சமீப காலங்களில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்திருப்பதாலும் நாடு முழுவதிலும் 1,800 மளிகைக் கடைகளுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் தன் வணிகத்தை விரிப்படுத்த நிஞ்சாகார்ட் உடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

முன்னதாக 2 முறை பிளிப்கார்ட் நிஞ்சாகார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தாலும் இம்முறை இதன் முதலீட்டு தொகை அதிகம். 

உள்ளூர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்துபவர்களுக்கு ஆதரவளிக்கும் சரியான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதிலும் நிஞ்சாகார்ட் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com