Enable Javscript for better performance
வங்கிக் கணக்கிலிருந்து பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு வரை- கிரிப்டோகரன்சி ஒரு பார்வை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வங்கிக் கணக்கிலிருந்து பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு வரை- கிரிப்டோகரன்சி ஒரு பார்வை

    By சிவசங்கர்  |   Published On : 16th December 2021 02:39 PM  |   Last Updated : 16th December 2021 04:01 PM  |  அ+அ அ-  |  

    Cryptocurrency_PTI

    வங்கிக் கணக்கிலிருந்து பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு வரை- கிரிப்டோகரன்சி ஒரு பார்வை

    பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது என்றால் அதில் 999 வழி ஒரு குஜராத்திக்குத் தெரியும் என்பார்கள். ஒருவகையில் தொழிலே வாழ்க்கை என இருப்பவர்களுக்கு பணத்தின் தடம் தெரிவது இயல்புதான். ஆனால் எந்த ஒரு சந்தை நிலவரமும் தெரியாமல் எப்படி பொருளாதாரம் இயங்குகிறது எனப் புரியாமல் இருப்பவர்கள் திடீரென ஒரே இரவில் செல்வந்தவர்களானால் பார்ப்பவருக்கும் ஆனவருக்கும் எப்படி இருக்கும்? அந்த மாயாஜாலத்தைத் தான் கிரிப்டோகரன்சி செய்து கொண்டிருக்கிறது. ஒன்றுமில்லை கடந்த 2018 தொடக்கத்தில் எதோ ஒரு பிரபல கிரிப்டோ நாணயத்தின் மீது ரூ.10,000 முதலீடு செய்திருந்தால் இன்று உங்கள் கைகளில் சில லட்சங்கள் விளையாடியிருக்கும். 

    உலகம் முழுக்க பங்குச்சந்தை அடிப்படையில் பெரு வணிகங்கள் நிழந்துகொண்டிருக்க சப்தமே இல்லாமல் இத்தனை பெரிய முதலீடுகளை எப்படி கிரிப்டோகரன்சி சாத்தியப்படுத்தியது? நம்பிக்கை என்பதைவிட அது கொடுத்த ரிட்டன்ஸ் தான் காரணம். கையில் 10 பைசா இருந்தாலும் அதற்கும் ஒரு கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தியது தான் அதன் வெற்றி. இந்தியாவில் இடைத்தரகர்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிட்காயினை வெறும் 20000 ஆயிரத்திற்கு விற்க அலைந்து கொண்டிருந்தார்கள். இன்று அதன் ஒரு காயினின் விலை ரூ.40 லட்சம்! உங்களிடம் 10 காயின் இருந்தால்? இந்தியாவில் நிறைய பேரிடம் 100 நாணயங்கள் இருக்கிறது. எத்தனை மதிப்பு ? 

    ஒருபக்கம் உழைத்துச் சம்பாதித்து சேர்க்க முடியாத ஊதியத்தை சில மாதங்களுக்குள் சம்பாதிக்கவும், உழைத்துச் சேர்த்ததை ஒருசில நிமிடங்களில் ஏமாறவும் வாய்ப்பு இருக்கிற ஒரு வணிகம். இது புரிந்து கொள்வதற்கும் கொஞ்சம் சிரமான ஒன்றுதான். கண்ணுக்குத் தெரியாத பொருளை உங்களிடம் 10 ரூபாய்க்கு விற்க வந்தால் வாங்குவீர்களா? அதுதான் கிரிப்டோவில் நடந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் உலகம் முழுவதும் பல லட்சம் கோடிகள் வந்து செல்லும் வணிக நுழைவாகவும் கிரிப்டோ இன்று மாறியிருக்கிறது.

    இந்தியாவிலும் இது அசாதாரண வளர்ச்சியை அடைந்திருக்கிறது . உண்மையிலேயே அரசு கிரிப்டோவைத் தடை செய்தால் அத்தனை கோடி முதலீடுகளுக்கு யார் பொறுப்பு? இந்தியா போன்ற பெரிய நாடுகளில் எதை ஒன்றையும் விளம்பரப்படுத்தாமல் சந்தையில் வெல்ல முடியாது என்பதுதான் எதார்த்தம். இந்த நிலைமையில் கிரிப்டோக்களை இந்தியாவில் அறிமுகம் செய்த சில செயலிகள் முக்கியமான நாளேடுகளில், செய்தி சேனல்களில் விளம்பரம் செய்தார்கள். அப்போதெல்லாம் இதன் தீவிரத்தை உணராத அரசு தற்போது தடையை கொண்டு வர முயற்சி செய்கிறது. 

    ஏன் அரசாங்கம் இதை நெருக்க இத்தனை சிரமம் எடுத்துக் கொள்கிறது? அதற்கும் வலுவான காரணம் இருக்கிறது. திருமண நிகழ்வில் மணமகனுக்கு நண்பர்கள்  கிரிப்டோகரன்சிகளின் சில பங்குகளை பரிசாக தரும் அளவிற்கு எளிதான ஒன்றாக மாறியிருப்பதால் இது குற்றச்செயல்களை செய்பவர்களுக்கும் பாதுகாப்பான பணப் பரிமாற்ற வழி தான். ஆனால் அந்த சிறிய வட்டத்திற்காக உழைப்பில் முதலீடு செய்தவர்களுக்கும் சேர்த்து தண்டனை வழங்குவது சரியா என இணையத்தில் பலர் கேள்வி கேட்டு வருகிற நிலையில் சில நாட்களுக்கு முன்  பிரதமர் மோடியின் டிவிட்டர் ஐடி ஹேக் செய்யப்பட்டது.

    இதையும் படிக்க| நாட்டின் ஏற்றுமதி 27% அதிகரிப்பு

    கணக்கு கைக்கு வந்ததும்  ‘இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யப் போவதில்லை’ என பதிவு செய்துள்ளனர். பின் உடனடியாக அந்த கணக்கு மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த குளிர்காலக் கூட்டுத் தொடரில் இந்தியாவில் கிரிப்டோ வணிகத்தை நெறிப்படுத்துவதா? இல்லை தடை செய்வதா என மசோதா தாக்கல் செய்ய இருக்கிற நிலையில் பிரதமரின் கணக்கு முடக்கம் முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தடை செய்ய இந்தக் காரணம் போதாதா? 

    கிட்டத்தட்ட இந்தியாவில் ரூ.10,000 கோடிக்கும் மேல் முதலீடு இருப்பதாக சமீபத்திய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இளைஞர்களிடம் மட்டுமே பெரும் மோகத்தில் இருக்கும் கிரிப்டோகளின் மதிப்பு எப்படி இத்தனை கோடியைக் கடந்தது? நிச்சயமாக இந்தியாவின் முதன்மை செல்வந்தவர்களின் கருப்புப் பணமும் இதில் இருப்பது தான் அரசாங்கத்தின் பெரிய தலைவலி. 

    இன்றைய நிலவரப்படி 3000-க்கும் அதிகமான கிரிப்டோகரன்சிகள் சந்தையில் இருக்கிறது. எதைத் தடை செய்வார்கள்? எதை நெறிமுறைக்கு உட்படுத்துவார்கள்? ஆயிரங்களில் முதலீடு செய்வதவர்களே தடை செய்தி பரவத் தொடங்கியதும் இழப்பில் பங்குகளை விற்றார்கள். லட்சங்களில் முதலீடு என்பது லட்சங்களில் நஷ்டம் என்பதால் பலர் கடுமையான இழப்பில் அதிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கிறார்கள். 

    உலகளவில் அறிமுகமாகி இந்தியாவிற்கு வந்த கிரிப்டோவின் வணிகம் இன்று பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டது. எத்தனை முதலீட்டாளர்கள்? எத்தனை கோடிகள்? அரசின் மசோதா வெறும் கண் துடைப்பா இல்லை உறுதியான முடிவா என்பது இன்னும் சில நாள்களில் தெரிய இருக்கிறது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp