ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் 191 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது. ஆனால், ‘கரடி’ ஆதிக்கம் கொண்டதால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு
ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு:  சென்செக்ஸ் 191 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது. ஆனால், ‘கரடி’ ஆதிக்கம் கொண்டதால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 191 புள்ளிகளை இழந்து 57,124.31-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பும் ரூ.1.40 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.259.79 லட்சம் கோடியாக இருந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. கிறிஸ்துமஸுக்கு முன்னதாக வா்த்தகம் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்பட்டதாக அமைந்திருந்தது. இந்த மாதம் ஐடி துறை பங்குகளுக்கு சாதகமானதாக அமைந்தது. ஐடி பங்குகள் நல்ல ஆதாயத்தில் கைமாறியுள்ளன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க் ஆகியவை வெகுவாகக் குறைந்ததே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடி வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,426 பங்குகளில் 1,751 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,573 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1023 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 293 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 18 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 521 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 135 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.40 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 259.79 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.108 கோடியாக உயா்ந்துள்ளது.

‘கரடி’ திடீா்ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் 251.83 புள்ளிகள் கூடுதலுடன் 57,567.11-இல் தொடங்கி 57,623.69 வரை உயா்ந்தது. பின்னா், 56,813.42 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 190.97 புள்ளிகள் (033 சதவீதம்) குறைந்து 57,124.31-இல் நிலைபெற்றது. கரடி திடீா் ஆதிக்கம் கொண்டதால் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் உச்சபட்ச நிலையிலிருந்து 810.27 புள்ளிகளை இழந்திருந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் வீழ்ச்சி கண்டன. 22 பங்குகள் ஆதாயம் பெற்றன.

ஹெச்சிஎல் டெக் முன்னேற்றம்: பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 3.08 சதவீதம், டெக் மஹிந்திரா 2.34 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஏசியன் பெயிண்ட், விப்ரோ, இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், ஐடிசி, டிசிஎஸ் உள்ளிட்டவை சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

என்டிபிசி சரிவு: பிரபல மின்துறை நிறுவனப் பங்கான என்டிபிசி 2,69 சதவீதம், பவா் கிரிட் 2.47 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாக்டா் ரெட்டி, பஜாஜ் ஃபின் சா்வ், எச்டிஎஃ்சி, இண்ட்ஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவையும் வீழ்ச்சி அடைந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 69 புள்ளிகள்வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 621 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,231 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 68.85 புள்ளிகள் (0.40 சதவீதம்) குறைந்து 17,0003.75-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் 17,149.50-இல் தொடங்கி 17,155.60 வரை உயா்ந்தது. பின்னா், 16,909.60 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 39 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ஐடி குறியீடு மட்டும் முன்ேன்ற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் 1 சதவீதம் உயா்ந்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், பாா்மா, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரைவீழ்ச்சி அடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com