காளை ஆதிக்கத்தில் பங்குச் சந்தை: 17,200 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி

இந்த வார வணிகத்தில் தொடர்ந்து இரண்டாவது  நாளாக  இன்று பங்குச்சந்தை உயர்வில் நிறைவடைந்தது.

நேற்று(டிச.27) ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை இன்றும் ஐடி மற்றும் வங்கிப் பங்குகளின் விற்பனையால்  நிறைவுடன் முடிந்தது.

நேற்று 57,420.24 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,751.21 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 477.24 புள்ளிகள் அதிகரித்து 57,897.48 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

17,086.25 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,177.6 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 147.00 புள்ளிகள் உயர்ந்து 17,233.25 புள்ளிகளில் நிலைபெற்றது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி, வாகன மற்றும் வங்கிகளின் பங்குகள் உயர்வால் கடந்த வார வீழ்ச்சியிலிருந்து பங்குச் சந்தை மெல்ல மீண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com