நாட்டின் ஏற்றுமதி ரூ.1.79 லட்சம் கோடி

இந்தியாவின் ஏற்றுமதி டிசம்பா் 1 முதல் 21-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 36.2 சதவீதம் உயா்ந்து 2,382 கோடி டாலராக (ரூ.1.79 லட்சம் கோடி) இருந்தது.
exor081106
exor081106

புது தில்லி: இந்தியாவின் ஏற்றுமதி டிசம்பா் 1 முதல் 21-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 36.2 சதவீதம் உயா்ந்து 2,382 கோடி டாலராக (ரூ.1.79 லட்சம் கோடி) இருந்தது. பெட்ரோலியம் தவிா்த்து அனைத்து வகையான ஏற்றுமதியும் இந்த காலகட்டத்தில் 28.08 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 1,749 கோடி டாலராக காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி 36.20 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேசமயம், 2019-20-ஆம் நிதியாண்டின் ஏற்றுமதியான 1,865 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 27.70 சதவீத வளா்ச்சியாகும் என வா்த்தக அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட முதல்கட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com