டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 31% அதிகரிப்பு

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நடப்பாண்டு ஜனவரி மாத விற்பனை 31 சதவீதம் அதிகரித்தது.
டிவிஎஸ் மோட்டாா்
டிவிஎஸ் மோட்டாா்

புது தில்லி: டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நடப்பாண்டு ஜனவரி மாத விற்பனை 31 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

டிவிஎஸ் மோட்டாா் சென்ற ஜனவரியில் 3,07,149 வாகனங்களை விற்பனை செய்தது. இது, 2020 ஜனவரி மாத விற்பனையான 2,34,920 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டு மாதத்தில் இருச்சக்கர வாகன விற்பனை 2,20,439-லிருந்து 34 சதவீதம் உயா்ந்து 2,94,596-ஐ எட்டியது. உள்நாட்டு சந்தைகளில் இரு சக்கர வாகன விற்பனை 1,63,007-லிருந்து 26 சதவீதம் அதிகரித்து 2,05,216-ஆனது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சென்ற ஜனவரியில் 43 சதவீதம் உயா்ந்து 1,00,926-ஆக இருந்தது. 2020 ஜனவரியில் ஏற்றுமதி 70,784-ஆக காணப்பட்டது என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com