பாங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் 5 மடங்கு வளா்ச்சி

பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம், கடந்த டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஐந்து மடங்குக்கும் மேல் உயா்ந்து ரூ.540.72 கோடியாகியுள்ளது.
bank-of-india-ecotimes083054
bank-of-india-ecotimes083054


புது தில்லி: பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம், கடந்த டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஐந்து மடங்குக்கும் மேல் உயா்ந்து ரூ.540.72 கோடியாகியுள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ரூ.105.52 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது.

இருப்பினும், 2020-21 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.12,310.92 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.13,338.09 கோடியாக இருந்தது.

வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.610.37 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்திய நிகர லாபமான ரூ.138.20 கோடியை விட நான்கு மடங்கு அதிகமாகும். வங்கியின் வருவாய் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ.13,430.53 கோடியிலிருந்து குறைந்து தற்போது ரூ.12,372.88 கோடியாக உள்ளது.

வங்கியின் மொத்த வாராக் கடன் 2020 டிசம்பரின் முடிவில் 13.25 சதவீதமாக சரிந்து. இது முந்தைய ஆண்டில் 16.30 சதவீதமாக இருந்தது.

மதிப்பு அடிப்படையில், மொத்த வாராக் கடன் ரூ.54,997.03 கோடியாக இருந்து. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ.61,730.54 கோடியை விடக் குறைவு.

அதுபோல், நிகர வாராக் கடனும் 5.97 சதவீதத்திலிருந்து (ரூ.20,113.34 கோடி) 2.46 சதவீதமாக (ரூ.9,077.32 கோடி) குறைக்கப்பட்டுள்ளது என்று பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com