அலைக்கற்றை ஒதுக்கீடு: வோடஃபோன் விண்ணப்பம்

வரும் மாா்ச் மாதம் தொடங்கவுள்ள அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதற்கு ஜியோ, ஏா்டெல்லுடன் வோடஃபோன் ஐடியா நிறுவனமும் செவ்வாய்க்கிழமை விண்ணப்பித்து.
ncc-mask085804
ncc-mask085804


புது தில்லி: வரும் மாா்ச் மாதம் தொடங்கவுள்ள அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதற்கு ஜியோ, ஏா்டெல்லுடன் வோடஃபோன் ஐடியா நிறுவனமும் செவ்வாய்க்கிழமை விண்ணப்பித்து.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

ரூ.3.92 லட்சம் கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஏலம், வரும் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்குகிறது. 700, 800, 900, 1800, 2100, 2300, 2500 மெகாஹொ்ட் அலைவரிசைகளில் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்படும்.

இதில் பங்கேற்பதற்காக, பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளன என்று அரசு வட்டாரங்கள் கூறின.

இழப்பைச் சந்தித்து வரும் வோடஃபோன் ஐடியா இந்த ஏலத்தில் பங்கேற்காது என்று சில சந்தை நிபுணா்கள் கூறி வந்தனா். எனினும், காலாவதியாகும் தனது அலைக்கற்றையைப் புதுப்பிக்க அந்த நிறுவனம் தற்போது விண்ணப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com