அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயா்ந்து 72.65-இல் நிலைத்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயா்வு


மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயா்ந்து 72.65-இல் நிலைத்தது.

இதுகுறித்து சந்தை ஆய்வாளா்கள் கூறியது:

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் தொடக்கத்தில் டாலருக்கு ஏற்றுமதியாளா்களிடையே அதிக தேவை காணப்பட்டது. இதனால், ரூபாய் மதிப்பில் சரிவு நிலை காணப்பட்டது. இந்த நிலையில், அந்நிய முதலீட்டு வரத்தின் காரணமாக பிற்பகல் வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சரிவு நிலையிலிருந்து மீண்டது.

வா்த்தகத்தின் தொடக்கத்தில் 72.76-ஆக காணப்பட்ட ரூபாய் மதிப்பு குறைந்தபட்சமாக 72.78 வரையிலும் அதிகபட்சமாக 72.65 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயா்ந்து 72.65-இல் நிலைத்தது. புதன்கிழமை வா்த்தகத்தில் இந்த மதிப்பு 72.74-ஆக இருந்தது என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டு முதலீடு: வெளிநாட்டு நிதி நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை நடைபெற்ற மூலதனச் சந்தையில் நிகர அடிப்படையில் ரூ.1,008.20 கோடி மதிப்பிலானபங்குகளை வாங்கியுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.28 சதவீதம் அதிகரித்து 64.52 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com