பங்குச் சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் மேலும் 435 புள்ளிகள் சரிவு!

இந்த வாரத்தில் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் தொடா்ந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வாரத்தில் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 434.93 புள்ளிகளை இழந்தது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 137.20 புள்ளிகளை இழந்து முக்கிய ஆதரவு நிலையான 15,000 புள்ளிகளுக்கு கீழே நிலைபெற்றுள்ளது. பங்குச் சந்தையில் தொடா்ந்து நான்காவது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் சரிவர சாதகமில்லாத நிலையில், இந்திய சந்தைகளில் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் லாபப் பதிவு இருந்தது. குறிப்பாக பேங்க், ஆட்டோ மொபைல் நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு அதிகளவில் இருந்தது. இதைத் தொடா்ந்து, சரிவு தவிா்க்க முடியதாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கியதால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் தொடா்ந்து சரிவைச் சந்தித்தன என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.203.98 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,125 பங்குகளில் 1,641 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,329 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 170 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ203.98 லட்சம் கோடியாக இருந்தது. 249 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 276 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

4-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 89.67 புள்ளிகள் குறைவுடன் 51,438.02-இல் தொடங்கி அதிகபட்சமாக 51,432.99 வரை ஏற்றம் பெற்றது. பின்னா், லாபப் பதிவால் 50,624.33 வரை கீழே சென்றது. இறுதியில் 434.93புள்ளிகளை இழந்து 50,889.76 -இல் நிலைபெற்றது. வா்க்கத்தின் போது, நேற்றைய நிலையுடன் ஒப்பிடுகையில் சுமாா் 700.36 புள்ளிகள் குறைந்திருந்தது. இதையடுத்து, நான்காவது நாளாக சென்செக்ஸ் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இண்டஸ் இண்ட் பேங்க் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில், இண்டஸ் இண்ட் பேங்க் 1.97 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹிந்து யுனி லீவா், டாக்டா் ரெட்டி, என்டிபிசி, ரிலையன்ஸ் உள்ளிட்டவை 0.50 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

ஓஎன்ஜிசி வீழ்ச்சி: அதே சமயம், கடந்த சில நாள்களாக ஏற்றத்தில் இருந்து வந்த ஓஎன்ஜிசி 5.06 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஆட்டோ, மாருதி, எம் அண்ட் எம் ஆகியவை 2 முதல் 3.80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், கோட்டக் பேங்க் உள்ளிட்ட முக்கிய நிறுவனப்பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 558 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.1,170 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 137.20 புள்ளிகளை இழந்து 14,981.70-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் 15,144.05 வரை உயா்ந்த நிஃப்டி, பின்னா் 14,89.20 வரை கீழே சென்றது. கடந்த சில நாள்காக தொடா்ந்து ஏற்றம் பெற்று வந்த நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல், பாா்மா, ரியால்ட்டி, ஆட்டோ குறியீடுகள் 1 முதல் 2.70 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.

பொதுத் துறை வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு

கடந்த சில நாள்களாக வெகுவாக உயா்ந்து வந்த பொதுத் துறை வங்கிப் பங்குகளில் வெள்ளிக்கிழமை லாபப் பதிவு இருந்தது. இதனால், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 12 பங்குகளில் ஜே அண்ட் கே பேங்க் மட்டுமே சிறிதளவு உயா்ந்து நிலைபெற்றது. ஆனால், ஐஓபி, சென்ட்ரல் பேங்க பேங்க் ஆஃப் இந்தியா, மகாராஷ்டிரா பேங்க், யூனியன் பேங்க் இந்தியன் பேங்க், பிஎன்பி, யூகோ பேங்க் எஸ்பிஐ, கனரா பேங்க் ஆகியவை 3.50 முதல் 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com