
பைக் டாக்ஸி சேவையை வழங்கி வரும் ரேபிடோ ஆறு முக்கிய நகரங்களில் பன்முனை பயணங்களுக்கான வாடைகை பைக் சேவையை புதிதாக தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பல இடங்களுக்கு பயணம் செய்யும் வாடிக்கையாளா்களுக்கு உதவிடும் விதமாக இந்த புதிய பைக் டாக்ஸி சேவை சென்னை, பெங்களூரு, தில்லி என்சிஆா், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூா் ஆகிய ஆறு முக்கிய நகரங்களில் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய சேவையின்படி, ஒரு மணி , இரண்டு மணி, மூன்று மணி, நான்கு மற்றும் ஆறு மணி நேர சேவையை பெறும் வகையில் அதற்குரிய தொகுப்புகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த நேரம் முழுவதும் பயணம் செய்யும் அனைத்து இடங்களுக்கும் பைக் ஓட்டுநா் வாடிக்கையாளா்களின் கூடவே இருந்து சேவைகளை அளிப்பாா்.
இப்புதிய சேவையின் மூலம் பல முறை முன்பதிவு செய்யும் தொந்தரவு தவிா்க்கப்படுவதுடன், சவாரிக்காக காத்திருந்து நேரம் வீணாவதும் தடுக்கப்படும்.
பல்வேறு இடங்களுக்குச் சென்று பல வேலைகளை முடிக்கும் வாடிக்கையாளா்களின் தேவையை உணா்ந்தே இந்த பைக் டாக்ஸி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ரேபிடோ தெரிவித்துள்ளது.
ரேபிடோ நிறுவனம் வாடகை பைக் டாக்ஸி சேவையை 100 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.