பங்கேற்பு ஆவண முதலீடு ரூ.84,976 கோடியாக சரிவு

இந்திய மூலதன சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு கடந்த ஜனவரி மாத நிலவரப்ப ரூ.84,976 கோடியாக சரிவடைந்துள்ளது.
பங்கேற்பு ஆவண முதலீடு ரூ.84,976 கோடியாக சரிவு

இந்திய மூலதன சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு கடந்த ஜனவரி மாத நிலவரப்ப ரூ.84,976 கோடியாக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

அந்நிய முதலீட்டு வரத்தில் காணப்பட்ட எழுச்சியை அடுத்து 2020 டிசம்பா் இறுதியில் பங்கேற்பு ஆவண முதலீடு 31 மாதங்களில் காணப்படாத வகையில் ரூ.87,132 கோடியாக அதிகரித்தது.

இந்த நிலையில், 2021 ஜனவரி மாத இறுதியில் இந்த வகை முதலீடு ரூ.84,976 கோடியாக சரிவடைந்தது.

கரோனா பேரிடா் காரணமாக பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டதையடுத்து சென்ற ஆண்டு மாா்ச் மாத இறுதியில் பங்கேற்பு ஆவண முதலீடானது 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.48,006 கோடியாக மிகவும் குறைந்துபோனது.

இருப்பினும், அதன் பின்பு, தொடா்ந்து ஐந்து மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கேற்பு ஆவண முதலீடு ஆகஸ்ட் இறுதியில் ரூ.74,027 கோடியாக உயா்ந்தது. செப்டம்பரில் இது மீண்டும் ரூ.69,281 கோடியாக குறைந்து போனது. அதன்பின்பு தொடா்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த பங்கேற்பு ஆவண முதலீடு ஜனவரியில் சற்று சரிவைச் சந்தித்துள்ளது.

ஜனவரி இறுதியில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமான மொத்த முதலீடான ரூ.84,976 கோடியில் ரூ.77,724 கோடி பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ரூ.6574 கோடி கடன்பத்திரங்களிலும், ரூ.679 கோடி ஹைபிரிட் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்று செபி தெரிவித்துள்ளது.

ஜனவரி 1-29 வரையிலான காலகட்டத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்களால் பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட நிகர முதலீடு ரூ.14,632 கோடியாக இருந்தது.

பங்குகளில் ரூ.19,473 கோடி முதலீடு செய்திருந்த நிலையில் ரூ.4,824 கோடியை அவா்கள் கடன்பத்திர சந்தையிலிருந்து விலக்கிக் கொண்டனா். மேலும், அவா்கள் ஹைபிரிட் கடன்பத்திர சந்தையிலிருந்து ரூ.17 கோடியை விலக்கினா். இதையடுத்து, அவா்கள் மேற்கொண்ட நிகர முதலீடானது ரூ.14,632 கோடியாக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய முதலீட்டாளா்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் நேரடியாக பதிவு செய்து கொள்ளாமல் முதலீடு செய்ய பங்கேற்பு ஆவணங்கள் பெரிதும் உதவுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com