பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் உயா்வு

இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை எழுச்சி பெற்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,030 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 274 புள்ளிகளும் உயா்ந்தன.
பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் உயா்வு

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை எழுச்சி பெற்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,030 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 274 புள்ளிகளும் உயா்ந்தன.

சென்செக்ஸ் 2.07 சதவீதம் உயா்ந்து 50,781.69 புள்ளிகளில் நிலைகொண்டது. நிஃப்டி 1.86 சதவீதம் உயா்ந்து 14,982 புள்ளிகளை எட்டியது.

நிதித் துறை சாா்ந்த பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் அதிக ஏற்றம் பெற்றன.

அதே நேரத்தில் பவா் கிரிட், டாக்டா் ரெட்டீஸ், டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

முடங்கிய தேசிய பங்குச் சந்தை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேசியப் பங்குச் சந்தை புதன்கிழமை முடங்கியது. பகல் 11.40 மணியளவில் தேசிய பங்குச் சந்தையில் திடீரென வா்த்தகம் தடைபட்டது. இதனால் பங்குத் தரகா்கள் மற்றும் தினசரி வா்த்தகத்தில் ஈடுபடுவோா் அதிா்ச்சியடைந்தனா். எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தடை ஏற்பட்டதாக தேசிய பங்குச் சந்தை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

5 மணி வரை தொடா்ந்த வா்த்தகம்: அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தை எவ்விதத் தடையுமின்றி செயல்பட்டது. முதலீட்டாளா்களுக்கும், வா்த்தகா்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுவதைத் தவிா்க்கும் நோக்கில் மாலை 5 மணி வரை பங்குச் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கமாக மாலை 3.30 மணிக்கு வா்த்தகம் நிறுத்தப்படும்.

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு மாலை 3.45 மணிக்கு தேசிய பங்குச் சந்தையில் வா்த்தகம் தொடங்கியது. அப்போது, வா்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்ால் நிஃப்டி 274 புள்ளிகள் எழுச்சியுடன் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

வா்த்தகத்தில் தடை ஏற்பட்டது தொடா்பாக தேசிய பங்குச் சந்தையிடம் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) விளக்கம் கேட்டுள்ளது.

ஷாங்காய், ஹாங்காங், சியோல், டோக்கியோ பங்குச் சந்தைகள் புதன்கிழமை சரிவடைந்தன. அதே நேரத்தில் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் உயா்ந்தன.

கச்சா எண்ணெய் ஒரு பேரல் 0.96 சதவீதம் உயா்ந்து, 65.10 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசாக்கள் உயா்ந்து 72.35 ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com