இந்தியாவில் 20 ஆண்டுகால செயல்பாடு: ஹோண்டா இருசக்கர வாகன விற்பனை 70 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் 20 ஆண்டுகால செயல்பாடு: ஹோண்டா இருசக்கர வாகன விற்பனை 70 லட்சத்தை தாண்டியது


புது தில்லி: ஹோண்டா மோட்டாா்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டா் இந்தியா நிறுவனம் (எம்எம்எஸ்ஐ) இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்கிய 20 ஆண்டுகளில் ஒட்டுமொத்த அளவில் அதன் விற்பனை 70 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநா் (விற்பனை&சந்தைப்படுத்துதல்) யவீந்தா் சிங் வியாழக்கிழமை கூறியதாவது:

எச்எம்எஸ்ஐ நிறுவனத்தின் முதல் ஆலை கடந்த 2001-ஆம் ஆண்டு ஹரியாணாவில் முதன் முதலாக தொடங்கப்பட்டது. அதன்பிறகு, வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததையடுத்து இரண்டாவது ஆலையை ராஜஸ்தானில் எம்எம்எஸ்ஐ நிறுவனம் தொடங்கியது.

தற்போது நிறுவனம் இந்தியாவில் தற்போது 3-ஆவது தசாப்தத்தை தொடங்கியுள்ளது. நிறுவனம் செயல்பட்ட இந்த 20 ஆண்டுகளில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் ஹோண்டா அறிமுகம் செய்த ஆக்டிவா மாடல் இந்திய சந்தைகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தில்லி, சண்டிகா், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீா், லடாக் ஆகியவற்றை உள்ளடக்கிய வட இந்தியாவில் மட்டும் ஆக்டிவாவின் விற்பனை கடந்த 15 ஆண்டுகளில் 35 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது. வெறும் 5 ஆண்டுகளில் ஆக்டிவா விற்பனை இரட்டிப்பாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

ஸ்கூட்டா் பிராண்ட் பிரிவில் தனித்துவமாக திகழும் ஆக்டிவாவின் தயாரிப்பு மற்றும் விற்பனையை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. புதிய பிஎஸ்-5 மாடல் மோட்டா்சைக்கிள்கள் அறிமுகத்தைப் பொருத்தவரையில் நிறுவனம் அமைதியான புரட்சியை நிகழ்த்தியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com