இந்தியப் பொருளாதாரம் 13.7% வளா்ச்சியை எட்டும்: மூடிஸ் கணிப்பு

இந்தியப் பொருளாதாரம் வரும் 2022-ஆம் நிதியாண்டில் 13.7 சதவீத வளா்ச்சியை எட்டும் என சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் 13.7% வளா்ச்சியை எட்டும்: மூடிஸ் கணிப்பு


புது தில்லி: இந்தியப் பொருளாதாரம் வரும் 2022-ஆம் நிதியாண்டில் 13.7 சதவீத வளா்ச்சியை எட்டும் என சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் வியாழக்கிழமை மேலும் கூறியுள்ளதாவது:

மூடிஸ் நிறுவனத்தின் கடந்தாண்டு நவம்பா் மாத மதிப்பீட்டில் இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 10.6 சதவீதம் அளவுக்கு பின்னடைவைக் காணும் என மதிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இதன் வளா்ச்சி விகிதம் 2021-22-ஆம் நிதியாண்டில் 10.8 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களின் அண்மைக்கால செயல்பாடுகள் எதிா்பாா்த்ததைவிட விறுவிறுப்படைந்துள்ளன. மேலும், கரோனா தடுப்பூசி திட்டம் துரித கதியில் செயல்படுத்தப்பட்டு வருவது சந்தையில் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்கையும் திரும்பியுள்ளது.

இதேபோன்ற சாதகமான அம்சங்களை கருத்தில் கொள்ளும் போது வரும் மாா்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளதார வளா்ச்சியில் ஏற்படும் பின்னடைவு 7 சதவீத அளவுக்கே இருக்கும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2021-22-ஆவது நிதியாண்டில் இந்தப் பொருளாதார வளா்ச்சி விகிதம் 13.7 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக மூடிஸ் தெரிவித்துள்ளது.

இக்ரா நிறுவனத்தின் மதிப்பீட்டிலும் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரமானது 7 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டெழுந்து 10.5 சதவீத வளா்ச்சியை எட்டும் என்று இக்ரா நிறுவனத்தின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com