காப்பீட்டு பாலிசிகள் விற்பனை: இந்தியன் ஓவா்சீஸ் வங்கி-எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் உடன்பாடு

வங்கி வாடிக்கையாளா்களுக்கு காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்யும் விதமாக எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) உடன்பாடு செய்து கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநா் பாா்த்தா பிரதிம் செங்குப்தா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வங்கியின் வாடிக்கையாளா்களுக்கு பலவிதமான பொதுக் காப்பீட்டு தீா்வுகள் மற்றும் புதுமையான தயாரிப்புகளை வழங்குவதற்காக எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஐஓபி உடன்பாடு செய்து கொண்டுள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனத்தின் சாா்பில் ஆயுள் காப்பீடு சாராத பாலிசி வா்த்தகத்தை வங்கி மேற்கொள்ளும்.

இந்த ஒப்பந்தம் இருதரப்புக்கும் நீண்டகால அடிப்படையில் நன்மை பயக்கும் வகையில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு தற்போது நாடு முழுவதும் 3,200 கிளைகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com