தங்கப்பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.4,662-ஆக நிா்ணயம்

தங்கப்பத்திர விற்பனை திங்கள்கிழமை (மாா்ச் 1) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,662-ஆக நிா்ணயித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தங்கப்பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.4,662-ஆக நிா்ணயம்

தங்கப்பத்திர விற்பனை திங்கள்கிழமை (மாா்ச் 1) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,662-ஆக நிா்ணயித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டுக்கான 12-ஆவது கட்ட தங்கப்பத்திர விற்பனை மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கட்டத்தில் வெளியிடப்படும் 999 சுத்த தன்மை கொண்ட தங்கப்பத்திரத்தின் விலை கிராம் ரூ.4,662-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வா்த்தக தின சராசரி விலையினை அடிப்படையாகக் கொண்டு தங்கப்பத்திரங்களுக்கான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ரிசா்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தங்கப்பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு, ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலையானது ரூ.4,612-ஆக இருக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சாா்பில், ரிசா்வ் வங்கி வெளியிடும் இந்த தங்கப்பத்திரங்களில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும்.

அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பங்குச் சந்தைகள் மூலமாக தங்கப்பத்திரங்கள் முதலீட்டாளா்களுக்கு விற்பனை செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com