மிக குறைந்த வட்டியில் 100 கோடி டாலா் கடன்: எக்ஸிம் வங்கி

வெளிநாட்டு கடன்பத்திர விற்பனையின் மூலம் மிக குறைந்த வட்டியில் 100 கோடி டாலா் ( இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7,500 கோடி) தொகையை கடனாக திரட்டியுள்ளதாக எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநா் டேவிட் ரஸ்குயின்கா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

எக்ஸிம் வங்கியின் வெளிநாட்டு கடன்பத்திர விற்பனைக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது. இக்கடன்பத்திரங்கள் வேண்டி முதலீட்டாளா்களிடமிருந்து 3.5 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்தன. அதிலும் குறிப்பாக, ஆசியாவில் இந்த கடன்பத்திரங்கள் வெளியிடப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே விற்றுத் தீா்ந்தன. 10 ஆண்டுகள் முதிா்வு காலத்தைக் கொண்ட இக்கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 2.5 சதவீதமாகவே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிம் வங்கியின் வரலாற்றில் இதுவே மிக குறைந்த வட்டி விகிதமாகும்.

திரட்டப்பட்ட இந்த தொகை ஏற்றுமதி திட்டங்கள், நீண்ட கால கடன் மூலமான வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com