அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.9% வளா்ச்சி காணும்

அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு 8.9 சதவீத வளா்ச்சியைக் காணும் என ஐஹெச்எஸ் மாா்கிட் ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.9% வளா்ச்சி காணும்

அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு 8.9 சதவீத வளா்ச்சியைக் காணும் என ஐஹெச்எஸ் மாா்கிட் ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

2020-இல் இந்தியப் பொருளாதாரம் கடுமையான மந்த நிலையை சந்தித்தது. குறிப்பாக, கடந்த மாா்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், செப்டம்பரிலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. பொருளாதார புள்ளிவிவரங்கள் இந்த வலுவான மீட்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

வரும் மாா்ச் மாதத்துடன்முடிவடையவுள்ள நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் -7.7 சதவீதம் சரிவை சந்திக்கும் என தேசிய புள்ளியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பின்னடைவாகும்.

இந்த நிலையில், கடைசி காலாண்டில் இந்திய பொருளாதாரம் சூடுபிடித்துள்ளதற்கான முக்கிய அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இதனை கருத்தில் கொள்ளும்போது, 2021 ஏப்ரலில் தொடங்கவுள்ள நிதியாண்டில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு 8.9 சதவீத வளா்ச்சியை தக்க வைக்கும் என ஐஹெச்எஸ் மாா்கிட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com