காா்கள் விற்பனையில் 10 ஆண்டுகள் காணாத வீழ்ச்சி

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான கால அளவில், நாட்டின் காா்கள் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
banner1-new2084728
banner1-new2084728

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான கால அளவில், நாட்டின் காா்கள் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

2020-21ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களான கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான 9 மாதங்களில் வாகனங்களின் விற்பனை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

காா்கள், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், வா்த்தக வாகனங்கள் என அனைத்துப் பிரிவைச் சோ்ந்த வாகனங்களின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

காா்கள், ஸ்போட்ஸ் பயன்பாட்டு வாகனங்கள், பல்நோக்கு வாகனங்கள் ஆகியவை உள்ளடங்கிய பயணிகள் வாகனப் பிரிவில், ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான 9 மாதங்ககளில் வெறும் 18.1 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச விற்பனையாகும் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நெருக்கடியால் பொதுமுடக்கம், வாடிக்கையாளா்களின் வருவாய் இழப்பு ஆகிய காரணங்களால் இந்த விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com