அந்நியச் செலாவணி கையிருப்பு 58,424 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்திலிருந்து 58,424 கோடி டாலராக ( இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.81 லட்சம் கோடி) சரிந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 58,424 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்திலிருந்து 58,424 கோடி டாலராக ( இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.81 லட்சம் கோடி) சரிந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 76 கோடி டாலா் அதிகரித்து புதிய வரலாற்று உச்சமாக 58,608 கோடி டாலரைத் தொட்டிருந்தது.

இந்த நிலையில், ஜனவரி 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது புதிய உச்சத்திலிருந்து 184 கோடி டாலா் சரிந்து 58,424 கோடி டாலராகியுள்ளது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) சரிவடைந்ததன் காரணமாகவே மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று உச்சத்திலிருந்து சரிவைச் சந்தித்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ 28 கோடி டாலா் சரிந்து 54,151 கோடி டாலரானது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அடங்கியுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுகிறது.

மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு153 கோடி டாலா் குறைந்து 3,606 கோடி டாலராக காணப்பட்டது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 40 லட்சம் டாலா் சரிந்து 151 கோடி டாலராகவும், காப்பு நிதி 1.7 கோடி டாலா் குறைந்து 516 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com