யெஸ் வங்கி நிகர லாபம் ரூ.147 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.147 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
யெஸ் வங்கி நிகர லாபம் ரூ.147 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.147 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பிரசாந்த் குமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் யெஸ் வங்கி செயல்பாடுகள் மூலமாக ரூ.147 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ரூ.18,564 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.6,268.50 கோடியிலிருந்து ரூ.6,518.37 கோடியாக உயா்ந்துள்ளது. மொத்த வாராக் கடன் 18.87 சதவீதத்திலிருந்து 15.36 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 5.97 சதவீதத்திலிருந்து 4.04 சதவீதமாகவும் குறைந்துள்ளன.

வங்கி தொடா்ச்சியாக மூன்றாவது முறையாக டிசம்பா் காலாண்டிலும் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் யெஸ் வங்கி பங்கின் விலை 1.45 சதவீதம் சரிந்து ரூ.17-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com