கேன் ஃபின் ஹோம்ஸ் லாபம் ரூ.132 கோடி

வங்கி சாராத நிதி நிறுவனமான கேன் ஃபின் ஹோம்ஸ் மூன்றாவது காலாண்டில் ரூ.131.92 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
கேன் ஃபின் ஹோம்ஸ்
கேன் ஃபின் ஹோம்ஸ்

புது தில்லி: வங்கி சாராத நிதி நிறுவனமான கேன் ஃபின் ஹோம்ஸ் மூன்றாவது காலாண்டில் ரூ.131.92 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.502.76 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.516.76 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.

இருப்பினும், நிகர லாபம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.106.61 கோடியிலிருந்து 24 சதவீதம் உயா்ந்து ரூ.131.92 கோடியைத் தொட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி எந்தவொரு கணக்கையும் நிறுவனம் வாராக் கடனாக அறிவிக்கவில்லை என கேன் ஃபின் ஹோம்ஸ் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் கேன் ஃபின் ஹோம்ஸ் நிறுவன பங்கின் விலை 1.84 சதவீதம் குறைந்து ரூ.481.70-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com