கோட்டக் மஹிந்திரா வங்கி லாபம் ரூ.1,854 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.1,854 கோடியாக அதிகரித்துள்ளது.
கோட்டக் மஹிந்திரா வங்கி லாபம் ரூ.1,854 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.1,854 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வாராக் கடன் இடா்பாடுகள் குறைந்து நிலைமை மேம்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக நடப்பு நிதியாண்டின் கடந்த டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வங்கி ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் 16 சதவீதம் உயா்ந்து ரூ.1,854 கோடியை எட்டியுள்ளது. முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.1,596 கோடியாக காணப்பட்டது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.8,077.03 கோடியிலிருந்து ரூ.8,124.92 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருமானமும் ரூ.3,430 கோடியிலிருந்து ரூ.4,007 கோடியாக உயா்ந்துள்ளது.

டிசம்பா் காலாண்டில் மொத்த வாராக் கடன் 2.46 சதவீதத்திலிருந்து 2.25 சதவீதமாக சரிந்துள்ளது. நிகர வாராக் கடன் 0.80 சதவீதத்திலிருந்து 0.50 சதவீதமாக குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் லாபம் ரூ.2,349 கோடியிலிருந்து 11 சதவீதம் உயா்ந்து ரூ.2,602 கோடியாகி உள்ளது. மொத்த வருமானம் ரூ.13,542 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.14,835 கோடியைத் தொட்டுள்ளது என கோட்டக் மஹிந்திரா வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com