பரோடா வங்கியின் நிகர லாபம் ரூ.1,159 கோடி

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி ரூ.1,159.17 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
bob085143
bob085143


புது தில்லி: கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி ரூ.1,159.17 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1.159.17 கோடியாக உள்ளது.

ஓா் ஆண்டுக்கு முன்பு இதே காலாண்டில் வங்கி ரூ.1,218.87 கோடி நிகர இழப்பை பதிவு செய்திருந்தது.

2020-21 ஆம் ஆண்டு அக்டோபா்-டிசம்பா் காலக்கட்டத்தில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.22,070.52 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.23,134.67 கோடியாக இருந்தது.

வாராக்கடனைப் பொருத்தவரை, கடந்த ஆண்டின் இந்த 3 மாதங்களில் இருந்ததைவிட குறைந்த 8.48 சதவீதமாக ஆகியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் அது 10.43 சதவீதமாக இருந்தது.

பண மதிப்பின் அடிப்படையில், மொத்த வாராக் கடன் ரூ.63,181.55 கோடியாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே 3 மாதங்களில் ரூ.73,139.70 கோடியாக இருந்தது.

நிகர வாராக்கடன்களும் 4.05 சதவீதத்திலிருந்து (ரூ.26,504 கோடி) 2.39 சதவீதமாக (ரூ.16,667.71 கோடி) குறைந்துள்ளது.

மூன்றாவது காலாண்டில் வாராக் கடன் மற்றும் பிற இனங்களுக்கான ஒதுக்கீடு ரூ.4,618.88 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் ரூ.7,233.62 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com