கனரா வங்கியின் நிகர லாபம் 9% சரிவு

பொதுத் துறை வங்கியான கனரா வங்கி, தனது நிகர லாபம் 9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது.
canara090638
canara090638


மும்பை: பொதுத் துறை வங்கியான கனரா வங்கி, தனது நிகர லாபம் 9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் இந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.696 கோடியாக உள்ளது.

இது, முந்தைய நிதியாண்டின் 3-ஆவது காலாண்டோடு ஒப்பிடுகையில் 9 சதவீதம் குறைவாகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டது. 2019 டிசம்பா், 2020 மாா்ச், ஜூன் மற்றும் செப்டம்பா் மாத நிதி நிலவரங்கள் இரு வங்கிகளின் ஒருங்கிந்த புள்ளிவிவரங்கள் ஆகும்.

ஒருங்கிணைந்த வங்கிகள், டிசம்பா் மாதத்துடன் நிறைவடையும் முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.764 கோடி வரிக்குப் பிறகு லாபத்தை பதிவு செய்திருந்தது. முந்தைய நிதியாண்டின் இந்த காலக்கட்டத்தில் ஒருங்கிணைப்புக்கு முந்தைய வங்கியின் இந்த லாபம் ரூ.329.62 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com