ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடிக்கும் கீழ் குறைந்தது: 9 மாதங்களில் முதன்முறை

​ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 92,849 கோடி வசூலாகியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடிக்கும் கீழ் குறைந்தது: 9 மாதங்களில் முதன்முறை


ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 92,849 கோடி வசூலாகியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மே மாதம் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி வசூல், ஏப்ரல் மாதம் புதிய உச்சமாக ரூ. 1.41 லட்சம் கோடி வசூலான நிலையில் ஜூன் மாதம் 1 லட்சம் கோடிக்கும் குறைவாகவே ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியுள்ளது. கடந்த 9 மாதங்களில் 1 லட்சம் கோடிக்கும் குறைவாக வசூலாவது இதுவே முதன்முறை. இருந்தபோதிலும் 2020 ஜூன் மாதத்தைக் காட்டிலும் இந்தாண்டு ஜூன் மாதம் 2 சதவிகிதம் கூடுதலாக வசூலாகியுள்ளது.

ஜூன் 2021 ஜிஎஸ்டி வருவாய்: ரூ. 92,849 கோடி
மத்திய ஜிஎஸ்டி: ரூ. 16,424 கோடி
மாநில ஜிஎஸ்டி: ரூ. 20,397 கோடி
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி: ரூ. 49,079 கோடி (சரக்கு இறக்குமதி மூலம் வசூலான ரூ. 25,762 உள்பட)
கூடுதல் வரி: ரூ. 6,949 கோடி (சரக்கு இறக்குமதி மூலம் வசூலான ரூ. 809 கோடி உள்பட)

வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் அளிக்கப்பட்டுள்ளதால் ஜூன் 5, 2021 முதல் ஜூலை 5, 2021 வரை உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் வசூலிக்கப்பட்ட தொகையும் இதில் உள்ளடங்கியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையிலிருந்து ரூ. 19,286 கோடி மத்திய ஜிஎஸ்டிக்கும், ரூ. 16,939 கோடி மாநில ஜிஎஸ்டிக்கும் முறையாக பிரித்து வழங்கப்பட்டதாக அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா 2-ம் அலை தாக்கத்தினால் ஜூன் மாதத்துக்கான ஜிஎஸ்டி குறைவாக வசூலாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com