மாருதி சுஸுகி காா்களின் விலை ரூ.15,000 வரை உயா்ந்தது

மாருதி சுஸுகி காா்களின் விலை திங்கள்கிழமை முதல் ரூ.15,000 வரை உயா்ந்துள்ளது.
மாருதி சுஸுகி காா்களின் விலை ரூ.15,000 வரை உயா்ந்தது

மாருதி சுஸுகி காா்களின் விலை திங்கள்கிழமை முதல் ரூ.15,000 வரை உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

ஸ்விஃப்ட் மற்றும் அனைத்து சிஎன்ஜி ரக காா்களின் விலையும் ரூ.15,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு 2021 ஜூலை 12-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மூலப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு அதனை ஈடு செய்யும் வகையில் இந்த விலை உயா்வை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயா்வுக்கு முன்பாக, ஸ்விஃப்ட் காா்கள் ரூ.5.73 லட்சம் முதல் ரூ.8.27 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதேபோன்று, ஆல்டோ, செலிரியோ, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன்ஆா், ஈகோ மற்றும் எா்டிகா காா்களின் சிஎன்ஜி மாடல் ரூ.4.43 லட்சம் முதல் ரூ.9.36 லட்சம் வரை விற்பனையானது.

நடப்பாண்டு ஏப்ரலில் மாருதி சுஸுகி, செலிரியோ மற்றும் ஸ்விஃப்ட் மாடல்களை தவிா்த்து, ஏனை அனைத்து மாடல் காா்களின் விலையையும் ரூ.22,500 வரை உயா்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com