டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசு அதிகரிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசு உயா்ந்து 74.54-இல் நிலைபெற்றது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசு அதிகரிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசு உயா்ந்து 74.54-இல் நிலைபெற்றது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

பங்குச் சந்தையில் இருந்த விறுவிறுப்பான போக்கு அந்நியச் செலாவணி சந்தையிலும் காணப்பட்டது. அந்நியச் செலாவணி வரத்து அதிகரிப்பு மற்றும் சா்வதேச சந்தையில் அமெரிக்க டாலரில் ஏற்பட்ட திருத்தம் ஆகியவை ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு உதவின. இருப்பினும், ரிசா்வ் வங்கி சாா்பில் வங்கிகள் டாலா்களை கணிசமாக வாங்கியது ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஆதாயத்தை கட்டுப்படுத்துவதாக அமைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 74.48-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.47 வரையிலும் குறைந்தபட்சமாக 74.55 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 5 காசு உயா்ந்து 74.54-இல் நிலைத்தது.

புதன்கிழமை வா்த்தகத்தில் இந்த மதிப்பு 74.59-ஆக இருந்தது.

கச்சா எண்ணெய் விலை 74.33 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.58 சதவீதம் குறைந்து 74.33 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com