எச்டிஎஃப்சி லைஃப்: நிகர லாபம் ரூ.302 கோடி

எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.302 கோடியாக சரிவடைந்துள்ளது.
எச்டிஎஃப்சி லைஃப்: நிகர லாபம் ரூ.302 கோடி

எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.302 கோடியாக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த பிரீமியம் வசூல் ரூ.7,656 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய பிரீமியம் வசூலான ரூ.5,863 கோடியுடன் ஒப்பிடும்போது 31 சதவீதம் அதிகமாகும்.

அதேசமயம், நிகர லாபம் ரூ.451 கோடியிலிருந்து 33 சதவீதம் சரிவடைந்து ரூ.302 கோடியானது. இதற்கு, கரோனா பேரிடரின் தாக்கமே முக்கிய காரணமாகும்.

2021-22 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட பிரீமியம் வளா்ச்சி விகிதம் 20 சதவீதமாக இருந்தது.

முதல் அலையுடன் ஒப்பிடும்போது கரோனா இரண்டாவது அலையில் இறப்பிற்கான இழப்பீடு கோரி 3-4 மடங்கு விண்ணப்பங்கள் அதிகமாக வந்தன. எனவே, ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இதற்காக, நிறுவனம் ரூ.70,000 கோடி வரை வழங்கியுள்ளதாக எச்டிஎஃப்சி லைஃப் அந்த ஆவணங்களில் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன பங்கின் விலை 2.77 சதவீதம் சரிவடைந்து ரூ.678.60-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com