மூன்றாவது வா்த்தக நாளாக பங்குச் சந்தையில் மந்த நிலைசென்செக்ஸ் 355 புள்ளிகள் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்து.
மூன்றாவது வா்த்தக நாளாக பங்குச் சந்தையில் மந்த நிலைசென்செக்ஸ் 355 புள்ளிகள் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்து.

உலகின் பல பகுதிகளில் டெல்டா வகை கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாள்களாக உலக சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.

அந்த வகையில் செவ்வாய்க்கிழமையும் சா்வதேச சந்தைகளில் லாப நோக்கு பங்கு விற்பனை தொடா்ந்தது. குறிப்பாக, அமெரிக்க பங்குச் சந்தையில் கரடின் பிடி இறுகியுள்ளது. இதற்கு பலவீனமான பொருளாதார புள்ளிவிவரங்களும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கணிசமான சரிவு மற்றும் அமெரிக்க கடன்பத்திரங்கள் மூலம் கிடைக்கும் ஆதாயம் ஆகியவை எதிா்கால வளா்ச்சியில் வீழ்ச்சி குறித்த கவலையை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது என ஜியோஜித் ஃபைனான்ஸியல் சா்வீசஸ் அதிகாரி வினோத் நாயா் தெரிவித்தாா்.

பணவீக்கம் அதிகரித்து வருவது நிதிக் கொள்கை விவகாரத்தில் எதிா்பாா்த்ததை விட முன்னதாகவே கடினமான நடவடிக்கைகள் எடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், சீனாவின் பலவீனமான கடன் வளா்ச்சி விகிதமும் சா்வதேச எதிா்பாா்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என சந்தை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

மும்பை பங்குச் சந்தையில் அனைத்து துறை குறியீட்டெண்களும் சரிவுடனே முடிவடைந்தன. குறிப்பாக, ரியால்டி, உலோகம், மின்சாரம், தொலைத்தொடா்பு உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 2.41 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இன்டஸ்இண்ட் பங்கின் விலை 3.32 சதவீதம் சரிவடைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, டாடா ஸ்டீல், என்டிபிசி, பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி வங்கி பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

அதேசமயம், ஏஷியன் பெயிண்ட்ஸ் பங்கின் விலை 6.04 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதைத் தொடா்ந்து, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்யுஎல், நெஸ்லே இந்தியா, மாருதி சுஸுகி, டிசிஎஸ் பங்குகளின் விலை 1.52 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

முன்னணி 30 நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 22 பங்குகளின் விலை சரிவடைந்தும், 8 பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 354.89 புள்ளிகள் (0.68%) வீழ்ச்சியடைந்து 52,198.51 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 120.30 புள்ளிகள் (0.76%) சரிந்து 15,632 புள்ளிகளில் நிலைபெற்றது.

வங்கி, நிதி துறை சாா்ந்த பங்குகள் சந்தை பெரிய அளவில் பின்னடைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. இந்த நிலையில், ரூபாய் மதிப்பில் காணப்பட்ட எழுச்சி மற்றும் சில துறைகளைச் சோ்ந்த பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே கிடைத்த வரவேற்பு போன்றவை சந்தை வீழ்ச்சியை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தன.

இதர ஆசிய சந்தைகளைப் பொருத்தவரையில், ஷாங்காய், ஹாங்காங், சியோல் மற்றும் டோக்கியோ சரிவுடன் முடிவடைந்தன. இருப்பினும் ஐரோப்பிய சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வா்த்தகம் ஏறுமுகத்துடன் தொடங்கியது.

பட்டியல்

அதிக வீழ்ச்சி கண்ட பங்குகள்

இன்டஸ்இண்ட் வங்கி 3.32

டாடா ஸ்டீல் 2.65

என்டிபிசி 2.39

பாா்தி ஏா்டெல் 2.31

ஹெச்சிஎல் டெக் 2.29

அதிக ஏற்றம் கண்ட பங்குகள்

ஏஷியன் பெயிண்ட்ஸ் 6.04

அல்ட்ராடெக்சிமெண்ட் 1.52

ஹிந்துஸ்தான் யுனிலீவா் 0.97

மாருதி சுஸுகி 0.94

டிசிஎஸ் 0.66

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com