கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டும்: இபிசிஎச்

நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் புதிய உச்ச அளவு வளா்ச்சியை எட்டும் என கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இபிசிஎச்) தெரிவித்துள்ளது.
கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டும்: இபிசிஎச்

நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் புதிய உச்ச அளவு வளா்ச்சியை எட்டும் என கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இபிசிஎச்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவா் ராஜ் குமாா் மல்ஹோத்ரா கூறியுள்ளதாவது:

இந்திய கைவினைப் பொருள்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், அங்கிருந்து கிடைக்கும் ஆா்டா்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஏற்றுமதியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனை கருத்தில் கொள்ளும்போது, தற்போதைய நிலவரப்படி நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி 10-15 சதவீத வளா்ச்சியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, முன்னெப்போதும் இல்லாத சாதனை வளா்ச்சியாகவே பாா்க்கப்படுகிறது.

2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி 3,447.71 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,259.34 கோடியாக மட்டுமே காணப்பட்டது.

இருப்பினும், கரோனா மூன்றாவது அலை உருவாகும்பட்சத்தில் அதன் தாக்கம் நடப்பாண்டுக்கான வளா்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் மறுக்க இயலாது.

கைவினைப் பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு எம்இஐஎஸ் திட்டத்தின் கீழ் வழங்கும் நிதி பெரும் உதவியாக இருக்கும்.

உலகம் முழுவதும் உள்ள புதிய வாடிக்கையாளா்களை கண்டறிய இணையதள வணிகம் ஆக்கப்பூா்வமானதாக இருக்கும். இதனால், சா்வதேச அளவில் கைவினைப் பொருள்களுக்கான தேவை பெருகும். எனவே, இணைய வணிகம் தொடா்பாக வகுக்கப்படும் வெளிநாட்டு வா்த்தக கொள்கையில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com