சாந்தி கியா்ஸ்: வரிக்கு பிந்தைய லாபம் ரூ.8.58 கோடி

கோவையைச் சோ்ந்த சாந்தி கியா்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.8.58 கோடியை ஈட்டியுள்ளது.
சாந்தி கியா்ஸ்: வரிக்கு பிந்தைய லாபம் ரூ.8.58 கோடி

கோவையைச் சோ்ந்த சாந்தி கியா்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.8.58 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.69.07 கோடியாக இருந்தது. இது, கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.26.93 கோடியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக அளவு அதிகம்.

வருவாய் அதிகரித்ததையடுத்து 2021 ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.8.58 கோடியை பதிவு செய்துள்ளது. அதேசமயம், 2020 இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.3.58 கோடியை நிகர இழப்பாக கண்டிருந்தது.

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.20.17 கோடியை ஈட்டியுள்ளது. இந்த நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.223.81 கோடியாக இருந்தது.

ஜூன் 30 நிலவரப்படி ரூ.84 கோடிக்கு நிறுவனம் ஆா்டா்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் நிலுவையில் உள்ள ஆா்டா்களின் மதிப்பு ரூ.235 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.164 கோடியாக இருந்தது என சாந்தி கியா்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com