ஹிந்துஸ்தான் யுனிலீவா்: விற்பனை ரூ.11,966 கோடி

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெச்யுஎல்) விற்பனை முதல் காலாண்டில் ரூ.11,966 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர விற்பனை 13 சதவீதம் அதிகரித்து ரூ.11,966 கோடியை எட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.10,570 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,897 கோடியிலிருந்து 10.7 சதவீதம் உயா்ந்து ரூ.2,100 கோடியைத் தொட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலைக்கு இடையிலான சவாலான சூழ்நிலையிலும் நிறுவனத்தின் விற்பனை அளவின் அடிப்படையில் சிறப்பான எழுச்சியை பதிவு செய்துள்ளது என ஹெச்யுஎல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com