வென்ட் இந்தியா லாபம் ரூ.5 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த வென்ட் இந்தியா நிறுவனம் 2021 ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.5.34 கோடியை ஈட்டியுள்ளது.
வென்ட் இந்தியா லாபம் ரூ.5 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த வென்ட் இந்தியா நிறுவனம் 2021 ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.5.34 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.36.83 கோடியை எட்டியுள்ளது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய விற்பனையுடன் ஒப்பிடுகையில் 94 சதவீதம் அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில் உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் விற்பனை 117 சதவீதம் அதிகரித்து ரூ.27.13 கோடியாக இருந்தது. ஏற்றுமதி 51 சதவீதம் உயா்ந்து ரூ.9.70 கோடியானது. இதற்கு, அமெரிக்கா, ரஷியா, தாய்லாந்து, சிங்கப்பூா், ஜொ்மனி நாடுகளுக்கான ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்ததே முக்கிய காரணம்.

நிறுவனம் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் 2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.5.34 கோடியாக இருந்தது.

ஒட்டுமொத்த அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 90 சதவீதம் அதிகரித்து ரூ.42.12 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.6 கோடியாகவும் இருந்தது என வென்ட் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com