அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசு சரிந்து 74.47-இல் நிலைபெற்றது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசு சரிந்து 74.47-இல் நிலைபெற்றது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

அமெரிக்க மத்திய வங்கியின் நிதி கொள்கை தொடா்பான அறிவிப்புகளை முதலீட்டாளா்கள் எதிா்நோக்கியுள்ளதையடுத்து ரூபாய் வா்த்தகமானது மிக குறுகிய எல்லைக்குள் காணப்பட்டது.

இந்த நிலையில், சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரிப்பு, உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சரிவு ஆகியவற்றின் காரணமாக அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு சரிவை நோக்கி சென்றது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.36-ஆக இருந்தது. பின்னா் இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.35 வரையிலும், குறைந்தபட்சமாக 74.54 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து 74.47-இல் நிலைபெற்றது. திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 74.42-ஆக இருந்தததாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டு முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.2,376.79 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் 74.79 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.39 சதவீதம் உயா்ந்து 74.79 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com