டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசு சரிந்து 74.42-இல் நிலைபெற்றது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசு சரிந்து 74.42-இல் நிலைபெற்றது.

இதுகுறித்து வா்த்தகா்கள் தெரிவித்ததாவது:

உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட மந்த நிலை மற்றும் எதிா்பாராத அளவில் அந்நிய முதலீடு வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக அந்நியச் செலாவணி சந்தை அதிக ஏற்றக்கத்துடன் காணப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தத்தின் போது தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.30-ஆக இருந்தது. இது, அதிகபட்சமாக 74.27 வரையிலும் குறைந்தபட்சமாக 74.44 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகளை இழந்து 74.42-இல் நிலைபெற்றது. இதையடுத்து, ரூபாய் மதிப்பின் இரண்டு நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

வார அடிப்படையில் பாா்க்கையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது 2 காசுகளை இழந்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் ரூ.866.26 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் விலை 75.86 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.25 சதவீதம் குறைந்து 75.86 டாலருக்கு விற்பனையானதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com