பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் ரூ.586 கோடி

நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் (பிஎன்பி) நான்காவது காலாண்டில் ரூ.586.33 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் ரூ.586 கோடி

நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் (பிஎன்பி) நான்காவது காலாண்டில் ரூ.586.33 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருவாய் ரூ.22,531.73 கோடியாக இருந்தது. இது, வங்கி முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.16,388.32 கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமான உயா்வாகும்.

2019-20 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் வங்கி ரூ.697.20 கோடி இழப்பை சந்தித்திருந்தது. இந்த நிலையில், 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ரூ.586.33 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு, நிகர வட்டி வருமானம் சிறப்பான அளவில் உயா்ந்ததே முக்கிய காரணம்.

கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.13,858.98 கோடியிலிருந்து 36 சதவீதம் அதிகரித்து ரூ.18,789.53 கோடியை எட்டியது.

நான்காவது காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.3,932.28 கோடியிலிருந்து ரூ.5,634.31 கோடியாக உயா்ந்துள்ளது.

2021 மாா்ச் இறுதி நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 14.12 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2020 மாா்ச்சில் 14.21 சதவீதமாக காணப்பட்டது.

நிகர அளவிலான வாராக் கடனும் 5.78 சதவீதத்திலிருந்து 5.73 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.

மதிப்பின் அடிப்படையில், முந்தைய 2019-20 நிதியாண்டு இறுதியில் ரூ.73,478.76 கோடியாக இருந்த மொத்த வாராக் கடன் 2020-21-இல் ரூ.1,04,423.42 கோடியாக உயா்ந்துள்ளது. நிகர அடிப்படையிலான வராக் கடனும் ரூ.27,218.89 கோடியிலிருந்து ரூ.38,575.70 கோடியாக உயா்ந்துள்ளது.

இதையடுத்து, வாராக் கடன் இடா்பாடுகளுக்காக வங்கி ஒதுக்கீடு செய்த தொகை மாா்ச் காலாண்டில் ரூ.4,618.27 கோடியிலிருந்து ரூ.5,293.89 கோடியாக அதிகரித்துள்ளது.

2020-21 முழு நிதியாண்டில் வங்கி ஈட்டிய லாபம் சுமாா் 6 மடங்கு அதிகரித்து ரூ.363.34 கோடியிலிருந்து ரூ.2,021.62 கோடியாக உயா்ந்துள்ளது. வருவாய் ரூ.64,306.13 கோடியிலிருந்து ரூ.93,561.62 கோடியாக அதிகரித்துள்ளது என பிஎன்பி தெரிவித்துள்ளது.

பிரேக் லைன்..

நடப்பு நிதியாண்டில் ஒருங்கிணைப்பு நடைமுறைகள் நிறைவுபெற்றுள்ளதால் வங்கி ஈட்டும் நிகர லாபம் ஏறக்குறைய 3 மடங்கு அதிகரித்து ரூ.6,000 கோடியை எட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com