செயில் லாபம் ரூ.3,470 கோடி

உருக்கு தயாரிப்பில் முன்னிலையில் உள்ள செயில் நிறுவனம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.3,469.88 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.
செயில் லாபம் ரூ.3,470 கோடி

உருக்கு தயாரிப்பில் முன்னிலையில் உள்ள செயில் நிறுவனம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.3,469.88 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனம் (செயில்) பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.23,533.19 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.16,574.71 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

வருவாயில் ஏற்பட்ட முன்னேற்றத்தையடுத்து, நிறுவனத்தின் நிகர லாபம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.2,647.52 கோடியிலிருந்து 31 சதவீதம் அதிகரித்து ரூ.3,469.88 கோடியை எட்டியுள்ளது.

இந்த காலகட்டத்தில் செலவினம் ரூ.11,682.12 கோடியிலிருந்து ரூ.18,829.26 கோடியாக உயா்ந்துள்ளது.

தனிப்பட்ட முறையில் செயில் ஈட்டிய நிகர லாபம் மாா்ச் காலாண்டில் 3,443.80 கோடியாக இருந்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ரூ.2,725.16 கோடியாக காணப்பட்டது.

2021 ஜனவரி-மாா்ச்சில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.16,628.80 கோடியிலிருந்து ரூ.23,606.06 கோடியாக அதிகரித்தது. செலவினம் ரூ.11,675.87 கோடியிலிருந்து ரூ.18,831.16 கோடியாக அதிகரித்துள்ளது என செயில் கூறியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் செயில் நிறுவனப் பங்கின் விலை 5.06 சதவீதம் உயா்ந்து ரூ.135.05-ஆக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com