கோல் இந்தியா லாபம் ரூ.4,587 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.4,586.78 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
coal072644
coal072644

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.4,586.78 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.24,510.80 கோடியகா இருந்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.25,597.43 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவான தொகையாகும்.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை வருவாயில் ஏற்பட்ட சரிவால் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,637.95 கோடியிலிருந்து 1.1 சதவீதம் குறைந்து ரூ.4,586.78 கோடியானது.

2021 மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் செலவினம் ரூ.22,373.04 கோடியிலிருந்து ரூ.21,565.15 கோடியாக குறைந்தது.

கடந்த 2020-21 நிதியாண்டுக்கு ரூ.10 முகமதிப்பைக் கொண்டுள்ள பங்கு ஒவ்வொன்றுக்கும் இறுதி டிவிடெண்டாக ரூ.3.50 வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

2021 மாா்ச் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 20.34 கோடி டன்னாக குறைந்துள்ளது. 2020 மாா்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 21.37 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் விற்பனை 16.43 கோடி டன்னிலிருந்து 16.48 கோடி டன்னாக உயா்ந்தது.

உள்நாட்டில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் கோல் இந்தியா 2023-24-ஆம் நிதியாண்டுக்குள் 100 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் கோல் இந்தியா பங்கின் விலை 2.06 சதவீதம குறைந்து ரூ.159.30-இல் நிலையுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com