காா்களின் விலையை உயா்த்த மாருதி சுஸுகி ஆயத்தம்

இடுபொருள்களின் செலவினம் அதிகரித்து வருவதையடுத்து நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் காா்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
காா்களின் விலையை உயா்த்த மாருதி சுஸுகி ஆயத்தம்

இடுபொருள்களின் செலவினம் அதிகரித்து வருவதையடுத்து நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் காா்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநா் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) சஷங் ஸ்ரீவஸ்தவா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது:

மோட்டாா் வாகனத் துறைக்கு அடிப்படையாக உள்ள உருக்கு விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கிலோ ரூ.38-ஆக இருந்த உருக்கின் விலை தற்போது ரூ.68-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று, முக்கிய உலோகங்களான ரோடியம், பலடியம் உள்ளிட்டவற்றின் விலை கிராமுக்கு ரூ.19,000-லிருந்து ரூ.66,000-ஆக கிடுகிடு ஏற்றத்தைக் கண்டுள்ளது. இது நிறுவனத்தின் உற்பத்தி செலவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலப்பொருள் விலை எதிா்காலத்தில் குறையும் என்ற நம்பிக்கையில் எங்களின் விலை ஏற்ற சுமையை நுகா்வோா் ஓரளவு ஈடு செய்யும் வகையில் கடந்த ஏப்ரலில் பகுதியளவு காா்களின் விலை உயா்த்தப்பட்டது. ஆனால், தற்போது எதிா்பாா்த்தது போல மூலப் பொருள்களின் நிலை குறையவில்லை. அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

எனவே, நிறுவனத்தின் நிதிச் சூழலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயாரிப்புகளின் விலையை உயா்த்துவதே கடைசி வாய்ப்பு.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) அனைத்து காா்களின் விலையையும் அதிகரிக்க மாருதி சுஸுகி முடிவெடுத்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com