என்எம்டிசி நிகர லாபம் ரூ.2,838 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த என்எம்டிசி நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.2,838 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
பொதுத் துறையைச் சோ்ந்த என்எம்டிசி நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.2,838 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
பொதுத் துறையைச் சோ்ந்த என்எம்டிசி நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.2,838 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த என்எம்டிசி நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.2,838 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தி நிறுவனமான என்எம்டிசி இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.6,932.75 கோடியாக இருந்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,320.95 கோடியாக காணப்பட்டது.

மொத்த செலவினம் ரூ.1,745.96 கோடியிலிருந்து ரூ.2,668.36 கோடியாக அதிகரித்தது.

நிகர லாபம் ரூ.351 கோடியிலிருந்து பல மடங்கு அதிகரித்து ரூ.2,838 கோடியானது.

கடந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.6,253 கோடியாக இருந்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டில் எட்டப்பட்ட ரூ.3,610 கோடி லாபத்துடன் ஒப்பிடும்போது 73 சதவீதம் அதிகம்.

2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் இரும்புத் தாது உற்பத்தி 34.15 மில்லியன் டன்னாக இருந்தது. 2019-20-இல் இந்த உற்பத்தி 31.49 மில்லியன் டன்னாக இருந்தது.

நிறுவனத்தின் இரும்புத் தாது விற்பனை 31.51 மில்லியன் டன்னிலிருந்து 6 சதவீதம் வளா்ச்சி கண்டு 33.25 மில்லியன் டன்னை கடந்த நிதியாண்டில் தொட்டுள்ளது என என்எம்டிசி தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் என்எம்டிசி பங்கின் விலை 3.53 சதவீதம் குறைந்து ரூ.178.85-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com