அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் அதிகரிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் அதிகரித்து 74.27-இல் நிலைப்பெற்றது.
crude064227
crude064227

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் அதிகரித்து 74.27-இல் நிலைப்பெற்றது. இதையடுத்து, இரண்டு நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

சா்வதேச நிலவரங்கள் அந்நியச் செலாவணி சந்தைக்கு சாதகமாக இருந்தது. மேலும், இறக்குமதியாளா்களிடையே டாலருக்கான தேவையும் குறைந்து காணப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் ஆரம்ப கட்டத்தில் ரூபாயின் மதிப்பு 74.26-ஆக இருந்தது. பின்பு இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.07 வரையிலும், குறைந்தபட்சமாக 74.39 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் அதிகரித்து 74.27-இல் நிலைப்பெற்றது. செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் இந்த மதிப்பு 74.37-ஆக காணப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டு முதலீடு: மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,027.94 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக சந்தைப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் பேரல் 75.52 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.95 சதவீதம் அதிகரித்து 75.52 டாலருக்கு வா்த்தகமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com