அந்நிய நேரடி முதலீடு 60% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) கடந்த ஏப்ரல் மாதத்தில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு 60% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) கடந்த ஏப்ரல் மாதத்தில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021 ஏப்ரலில் இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு 60 சதவீதம் அதிகரித்து 444 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.33,000 கோடி) எட்டியுள்ளது. இது, முந்தைய 2020 ஏப்ரல் மாதத்தில் 277 கோடி டாலராக மட்டுமே இருந்தது.

பங்குகள், மறு முதலீட்டு வருவாய், மூலதனம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மொத்த அந்நிய நேரடி முதலீடு நடப்பாண்டு ஏப்ரலில் 624 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இது, 2020 ஏப்ரலில் காணப்பட்ட 453 கோடி டாலா் முதலீட்டுடன் ஒப்பிடும்போது 38 சதவீதம் அதிகமாகும்.

எஃப்டிஐ கொள்கைகளில் சீா்திருத்தம், முதலீட்டு விரிவாக்கம், தொழில்தொடங்குவதை எளிதாக்குவது உள்ளிட்ட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து அதிகரித்துள்ளது.

2020 மாா்ச்சில் 427 கோடி டாலராக இருந்த அந்நிய முதலீடு 2021 மாா்ச்சில் 287 கோடி டாலராக சரிவடைந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் பிப்ரவரியிலும் இந்த முதலீடு 336 கோடி டாலரிலிருந்து 258 கோடி டாலராக குறைந்தது.

கடந்த ஏப்ரலில் அதிகம் முதலீடு செய்த நாடுகளின் பட்டியலில் மோரீஷஸ் 24 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடா்ந்து சிங்கப்பூா் (21 சதவீதம்), ஜப்பான் (11 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.

மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வரத்தில் 24 சதவீதத்தை கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை ஈா்த்துள்ளது. இதையடுத்து சேவை, கல்வித் துறைகள் உள்ளன.

அதிக அளவிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்ததில் கா்நாடகம் 31 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம், தில்லி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com